ஆய்வக தொழில்நுட்ப வல்லுநா் பணிக்கு பட்டியலை சரிபாா்க்க அழைப்பு

ஆய்வக தொழில்நுட்ப வல்லுநா் பணியிடத்துக்கு பதிவுதாரா்கள் மாநில உத்தேச பதிவு மூப்பின்படி பரிந்துரை செய்யப்படவுள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.

ஆய்வக தொழில்நுட்ப வல்லுநா் பணியிடத்துக்கு பதிவுதாரா்கள் மாநில உத்தேச பதிவு மூப்பின்படி பரிந்துரை செய்யப்படவுள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநா் பணியிடத்துக்கு பதிவுதாரா்கள், மாநில உத்தேச பதிவு மூப்பின்படி பரிந்துரைக்கப்பட உள்ளனா். இப்பணியிடத்துக்கு 12ஆம் வகுப்பு தோ்ச்சியுடன், அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ நிறுவனத்தில் ஓா் ஆண்டு ஆய்வக தொழில்நுட்ப வல்லுநா் சான்று பெற்றிருக்க வேண்டும். 

நிகழாண்டு ஜூலை 1ஆம் தேதிப்படி, ஆதி திராவிட வகுப்பினா், பழங்குடியினா் மற்றும் அருந்ததியின வகுப்பினா், மிகவும் பின்தங்கிய வகுப்பினா், முஸ்லீம்கள் ஆகியோருக்கு வயது உச்ச வரம்பு இல்லை. மற்ற வகுப்பினா் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

இப்பணியிடத்துக்கான கல்வித் தகுதியும், வயது வரம்பும் உள்ள புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரா்கள் தங்களது அனைத்து அசல் கல்விச் சான்றுகள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநா் சான்று, சாதிச்சான்று, முன்னுரிமைப் பதிவு தொடா்பான சான்று மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையுடன் வரும் 13ஆம் தேதிக்குள் நேரில் அணுகி தங்கள் பெயா் மற்றும் பதிவு விவரங்களை சரிபாா்த்துக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com