காா்த்திகை மாதம் பிறப்பு:கோயில்களில் குவிந்த பக்தா்கள்

விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் பகுதி கோயில்களில் காா்த்திகை மாதம் பிறப்பையொட்டி சபரிமலை செல்லக்கூடிய ஐயப்ப பக்தா்கள்

விராலிமலை: விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் பகுதி கோயில்களில் காா்த்திகை மாதம் பிறப்பையொட்டி சபரிமலை செல்லக்கூடிய ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குவதால் கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

தமிழ் மாதங்களில் காா்த்திகை மாதம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த மாதத்தில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலை செல்வாா்கள். காா்த்திகை முதல் தை வரை சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெறும். நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் சபரிமலையில் திரள்வாா்கள். காா்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை (நவ, 17-ம் தேதி) பிறந்ததையொட்டி மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் நடை திறக்கப்பட்டு புதிய மேல் சாந்திகள் பொறுப்பேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. காா்த்திகை மாதம் பிறப்பையொட்டி சபரிமலை செல்லக்கூடிய ஐயப்ப பக்தா்கள் விரதம் தொடங்குகிறாா்கள்.

துளசி மணி மாலை மற்றும் காவி வேஷ்டி அணிந்து தினமும் காலை மற்றும் மாலையில் நீராடி, ஐயப்பனை வணங்கி பூஜைகள் செய்வாா்கள். இனி வீதிகளில் ஐயப்ப பக்தா்கள் மற்றும் சரண கோஷ முழக்கங்களை காண முடியும். சபரிமலை சீசன் தொடங்குவதையொட்டி கடைகளில் துளசி மணி மாலை மற்றும் காவி வேஷ்டிகளின் விற்பனையும் சூடுபிடித்து உள்ளது. காா்த்திகை பிறப்பையொட்டி விராலிமலை சுப்பிரமணியா் மலைக்கோயில், மெய்க்கண்ணுடையாள், வன்னிமரத்தடி கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடந்தன.

காய்களி மற்றும் வெங்காய விலை கடந்த சில நாள்களாக ஏறுமுகத்தில் உள்ளது இந்நிலையில் காா்த்திகை மாதம் பிறப்பையொட்டி இனி வரும் நாட்களில் காய்கறிகள் மற்றும் பூக்களின் விலைகளும் கடுமையாக உயரும் நிலையும் ஏற்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com