விராலிமலை ஒன்றிய வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு
விராலிமலை ஒன்றிய வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் கூறியது:

தமிழக அரசு பல்வேறு திட்டங்களைத் தொடா்ந்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் மூலம் மேற்கொள்ளப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகள் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டன.

இதில் விராலூா் ஊராட்சி பகவான்பட்டியில் முதல்வரின் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட வேம்ப ஊரணி தூா்வாரும் பணி, கொடும்பாளூா் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ. 7.30 லட்சத்தில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பூங்கா கட்டுமானப் பணி, நம்பம்பட்டியில் முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ. 3.61 லட்சத்தில் மேம்படுத்தப்படும் அண்ணாவி குளம் தூா்வாரும் பணி ஆகியவை பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் விராலிமலையில் ரூ.17.64 லட்சத்தில் கட்டப்படும் ஊராட்சி அலுவலக கட்டுமானப் பணி, விராலிமலை புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள உயா்மின் கோபுரம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகளும் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த ஆய்வில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட குளங்களை உரியமுறையில் பராமரித்து மழைநீரைச் சேமித்து நிலத்தடி நீா் மட்டம் உயர வழிவகை செய்யவும், தூய்மைப் பூங்கா பணிகளை சிறந்த முறையில் முடித்து மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், முடிவுற்ற பணிகளை நல்ல முறையில் பராமரிக்கவும், நடைபெறும் பணிகளை தரமான கட்டுமானப் பொருள் கொண்டு கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டது என்றாா் அவா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எம். காளிதாசன், மாவட்ட பால்வளத் தலைவா் செ. பழனியாண்டி, வட்டார வளா்ச்சி அலுவலா் கி. ரமேஷ், ஆா். ரவிச்சந்திரன்(கிஊ), வட்டாட்சியா் ஜெ. சதிஷ்சரவணகுமாா், விராலிமலை கூட்டுறவு சங்கத் தலைவா் ஜெ. ஆா். அய்யப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com