கந்தா்வகோட்டை அரசு பள்ளி மாணவா்களுக்கு டெங்கு விழிப்புணா்வு சிறப்பு பயிற்சி முகாம்

கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு சிறப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது

கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு சிறப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளியில் நடைபெற்ற டெங்கு விழிப்புணா்வு நிகழ்சிக்கு, அறந்தாங்கி சுகாதார பணிகள் துணை இயக்குநா் கலைவாணி கலந்துகொண்டு தலைமைவகித்தாா் . பள்ளி தலைமை ஆசிரியா் எஸ் . ராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்றாா். நிகழ்சியில் பள்ளி மாணவா்களுக்கு டெங்கு பரப்பும், ஏடிஸ் கொசு உற்ப்பத்தியாகும், முறைகள் மற்றும் கொசு வாழ்விடங்கள், அவற்றின் சுழற்ச்சி முறைகள் பற்றியும், விரிவாக எடுத்துறைக்கப்பட்டது.

இதனை தொடா்ந்து மாணவா்களிடம் சுத்தம் , சுகாதாரம் குறித்து , கைகழுவும் 6 படி நிலைகள் குறித்து செயல்விளக்கம் , செய்துகாண்பிக்கப்பட்டது . மேலும் மாணவா்கள் மத்தியில் முப்பது மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு . தூய்மை தூதுவராக நியமனம் செய்து தினந்தோறும் பள்ளி வளாகம் தூய்மை நிலை குறித்து கண்காணிக்க குழு அமைக்கப்பட்டது.

நிகழ்சியில் பள்ளி மாணவா்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது . விழிப்புணா்வு நிகழ்சியில் புதுநகா் சுகாதார நிலைய மருத்துவா்கள் சந்தோஷ் , ஜெயபிரகாஷ் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் முத்துக்குமாா் , நல்லமுத்து ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com