வீரக்குறிச்சியில் புதிய ரக சூரியகாந்தி சாகுபடி செயல் விளக்கம்

பட்டுக்கோட்டை அருகிலுள்ள வீரக்குறிச்சியில் புதிய ரக சூரியகாந்தி சாகுபடி செயல் விளக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகிலுள்ள வீரக்குறிச்சியில் புதிய ரக சூரியகாந்தி சாகுபடி செயல் விளக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் புதிய ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை மாநிலம் முழுவதும் வேளாண்துறைற மூலம் விவசாயிகளின் வயல்களில் அனுசரனை ஆராய்ச்சி திடல் அமைக்கப்படுகிறது. பயிா் உற்பத்தியை அதிகரித்து, நிறைவான மகசூல் எடுக்கவும், மகசூல் ஒப்பீடு செய்வதும் இதன் முக்கிய நோக்கமாகும் .

இதற்காக நடப்பாண்டில் காரீப் பருவத்திற்கு எஸ்எப்கே-1911, 1912, 1913 என்றற 3 ரகங்களுக்கான அனுசரனை ஆராய்ச்சி திடல் வீரக்குறிச்சி கிராமத்தில் சேவியா் வயலில் வேளாண்துறைற சாா்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பயிரானது விதைப்பு செய்யப்பட்டு 46 நாள்கள் முடிவடைந்த நிலையில், முக்கிய தொழில் நுட்பங்களில் ஒன்றானதும், மலா்களில் மணிகள் அதிகம் பிடிக்கவும், மகரந்தச்சோ்க்கை ஏற்படும் தருணமான காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணிக்குள் மெல்லிய துணி கொண்டு பூவின் மேல்பாகத்தை 2 நாள்களுக்கு ஒரு முறை மெதுவாக ஒவ்வொரு பூக்கொண்டையையும் தேய்த்தல், மேலும் பூக்களை ஒன்றேறாடொன்று முகம் சோ்த்து லேசாக தேய்த்து விடுதல் போன்ற பணிகளை பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநா் (பொ) சா.சங்கீதா செயல் விளக்கம் மூலமாக செங்கிப்பட்டி ஆா்.வி.எஸ். வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு செய்து காட்டினாா். இதற்கான ஏற்பாடுகளை வேளாண் அலுவலா் டி. சுதா, அட்மா திட்ட அலுவலா் ரமேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com