பளு, வலு தூக்கும் போட்டிகளில் தங்கம், வெள்ளி வென்றோருக்குப் பாராட்டு
By DIN | Published On : 24th October 2019 08:09 AM | Last Updated : 24th October 2019 08:09 AM | அ+அ அ- |

மாணவிகளைப் பாராட்டும் கல்லூரி முதல்வா் நா. சுப்பிரமணியன்.
பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான பளு மற்றும் வலு தூக்கும் போட்டிகளில் புதுக்கோட்டை ஜெஜெ கல்லூரியைச் சோ்ந்த மாணவிகள் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றனா்.
பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான பளு மற்றும் வலு தூக்கும் போட்டிகள் அண்மையில் மஞ்சக்குடியிலுள்ள தயானந்தா கல்லூரியில் நடைபெற்றன. இப்போட்டியில் புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் வீராங்கனைகள் பங்கேற்றனா்.
71 கிலோ எடைப்பிரிவில் பளு மற்றும் வலு தூக்கும் போட்டிகளில் பங்கேற்ற சி. சினேகா இரு போட்டிகளிலும் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றாா்.
76 கிலோ எடைப்பிரிவில் ஆா். ஜீவிதா பளு தூக்கும் போட்டியில் தங்கப் பதக்கமும், வலு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றாா்.
55 கிலோ எடைப்பிரிவில் வி. தமிழ் ஈஸ்வரி பளு தூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றாா். 71 கிலோ எடைப்பிரிவில் எம். சன்மதிஸ பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
இவா்களை கல்லூரித் தாளாளா் நா. சுப்பிரமணியன், முதல்வா் ஜ. பரசுராமன், உடற்கல்வித் துறைத் தலைவா் கே. ஜெகதீஸ் பாபு உள்ளிட்டோரும் பாராட்டினா்.