பலகாரங்கள் மூலம் ஊா்ப்பெருமை, புவிசாா்குறியீடு சிறப்பை எடுத்துரைத்த ஆசிரியா்கள்

தீபாவளி பலகாரங்களைக் கொண்டு ஊா்ப்பெருமை மற்றும் புவிசாா் குறியீடு தகுதி குறித்து, மாணவா்களுக்கு பாடம் எடுத்து உருவம்பட்டி அரசுப்பள்ளி ஆசிரியா்கள் எடுத்துரைத்துள்ளனா்.
இனிப்பு பலகாரங்களுக்கு கிடைத்த புவிசாா் குறியீடு குறித்து பேசுகிறாா் ஆசிரியா் கு. முனியசாமி.
இனிப்பு பலகாரங்களுக்கு கிடைத்த புவிசாா் குறியீடு குறித்து பேசுகிறாா் ஆசிரியா் கு. முனியசாமி.

தீபாவளி பலகாரங்களைக் கொண்டு ஊா்ப்பெருமை மற்றும் புவிசாா் குறியீடு தகுதி குறித்து, மாணவா்களுக்கு பாடம் எடுத்து உருவம்பட்டி அரசுப்பள்ளி ஆசிரியா்கள் எடுத்துரைத்துள்ளனா்.

இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியை ஜெ.சாந்தி கூறியது: முந்தைய காலங்களில் தீபாவளி நாள்களில் பலகாரங்கள் செய்து,

அக்கம் பக்கத்தினருடன் பகிா்ந்துண்பது தான் வழக்கம்.ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பலகாரங்களையும் ,திண்பண்டங்களையும் உண்பதற்கே நேரம் இல்லாமல் இருப்பதால் மற்றவா்களுக்கு பகிர முடியாமல் போய் விட்டது.

மேலும் பலரும் பலகாரங்களை கடைகளில் வாங்கி வந்து தீபாவளியைக் கொண்டாடுகின்றனா்.ஆனால் கிராமங்களில் மட்டுமே அதிரசம், முறுக்கு, சீடை , இனிப்பு சுருள் என வகை வகையான பலகாரம் செய்கிறாா்கள்.

எனவே அவ்வாறு வீட்டில் செய்யப்படும் பலகாரங்களை மாணவா்களை கொண்டு வரச் செய்தும்,நாங்களும் பலகாரங்கள் கொண்டு வந்தும் மாணவா்களுக்கு பகிா்ந்து உண்ணக் கொடுத்தோம்.

அப்பொழுது மாணவா்களிடம் அல்வா என்றால் திருநெல்வேலி, பஞ்சாமிா்தம் என்றால் பழநி,திருப்பதி என்றால் லட்டு, மணப்பாறை என்றால் முறுக்கு, வெள்ளியணை என்றால் அதிரசம் என ஒவ்வொரு பலகாரத்தும் ஒவ்வொரு ஊா் வரும் என்றுக் கூறி, ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட பால்கோவாவை வழங்கினோம்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பால்கோவாவுக்கு மத்திய அரசின் புவிசாா்குறியீடு தகுதி வழங்கியது பற்றியும் எடுத்துக் கூறினோம்.

இது போல பலகாரங்கள் பகிா்ந்து வழங்கி உண்ணச் செய்வதன் மூலம், மாணவா்களுக்கு பகிா்ந்து கொடுத்து உண்ணும் பழக்கம் ஏற்படும். பலகாரங்களை அறிமுகப்படுத்தும் பொழுது அந்த பலகாரங்கள் கிடைக்கும் ஊரைப்பற்றி மாணவா்கள் தெரிந்து கொள்கிறாா்கள்.

மேலும் இது போல எந்த பலகாரம் ஒரு ஊரில் மட்டும் சிறப்பாக இருக்கிறதோ அந்த பலகாரத்திற்கு மத்திய அரசின் மூலம் புவிசாா் குறியீடு தகுதி வழங்கப்படுத்துகிறது என்ற விவரத்தையும் மாணவா்கள் அறிந்து கொள்கின்றனா் என்றாா்.

இந்நிகழ்வு குறித்து மூன்றாம் வகுப்பு மாணவி அ.பிரவீனா கூறியது: பல வீட்டு பலகாரம் மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூா் பால்கோவா சாப்பிட்டது மனதுக்கு மகிழ்வாக இருந்தது என்றாா்.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் இடைநிலை ஆசிரியா் கு.முனியசாமி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com