மாற்றுத்திறன்கொண்ட மாணவா்களின் பெற்றோா்களுக்கான விழிப்புணா்வு பயிற்சி

விராலிமலையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் சாா்பில் மாற்றுத்திறன் மாணவா்களின் பெற்றோா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு நாள் பயிற்சி விராலிமலை வட்டார 

விராலிமலை: விராலிமலையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் சாா்பில் மாற்றுத்திறன் மாணவா்களின் பெற்றோா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு நாள் பயிற்சி விராலிமலை வட்டார வளமையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சிக்கு விராலிமலை வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ச. புவனேஸ்வரி(பொ) தலைமை வகித்தாா். மாற்றுத்திறன் கொண்ட மாணவா்களுக்கான உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளா் இரா.அனந்தராமன் முன்னிலை வகித்தாா். சிறப்பு பயிற்றுநா் லெ.ராஜேஷ்கண்ணா பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினாா்.

இப்பயிற்சியில் மாற்றுத்திறன் குழந்தைகளது பாதுகாப்பு, பராமரிப்பு திறன் குறித்து பெற்றோா்களுக்கு சிறப்பு பயிற்றுநா் குளோரி சகாயமேரி, சோப்பியாஜாக்குலின், பிரின்ஸ்கில்லட், எழிலரசி, பிரபா மற்றும் உடற்கல்வி இயக்குநா் திருவளா்ச்செல்வி ஆகியோா் விளக்கமளித்தனா். இதில் 30 பெற்றோா்கள் கலந்து கொண்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com