கொழுஞ்சி பண்ணையில் விவசாயம் படிக்கும் மாணவிகளுக்கு களப் பயிற்சி

புதுக்கோ ட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள ஒடுகம்பட்டி கொழுஞ்சி உயிர்ச்சூழல் பண்ணை மற்றும் பயிற்சி மையத்தில் பெரம்பலூர் ரோவர் கல்லூரியில் விவசாயம் படிக்கும் மாணவிகள் 8 பேருக்கு களப்


புதுக்கோ ட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள ஒடுகம்பட்டி கொழுஞ்சி உயிர்ச்சூழல் பண்ணை மற்றும் பயிற்சி மையத்தில் பெரம்பலூர் ரோவர் கல்லூரியில் விவசாயம் படிக்கும் மாணவிகள் 8 பேருக்கு களப் பயிற்சி கடந்த செப். 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெற்றது.
பண்ணையில், ரசாயன உரமின்றி இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் முறைகள், பஞ்சகவ்யா உள்ளிட்ட உயிர் உரங்கள், பூச்சி விரட்டிகள் தயாரிப்பு, விதைப் பந்து தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
தொடர்ந்து அருகேயுள்ள வீரக்குடி, பழைய வீரக்குடி ஆகிய கிராமங்களில் இயற்வை விவசாயம் மேற்கொள்ளும் நிலங்களுக்கும் மாணவிகள் நேரில் சென்று பயிற்சி பெற்றனர்.
ஏற்பாடுகளை கொழுஞ்சி உயிர்ச்சூழல் பண்ணையின் இயக்குநர் அர்னால்ட் குவிண்டால், தலைமைப் பயிற்சியாளர் பங்கஜவல்லி உள்ளிட்ட பயிற்சியாளர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com