குளோரின் கலந்த குடிநீரை மட்டுமே விநியோகிக்க அறிவுறுத்தல்

மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு குளோரின் கலந்த குடிநீரை மட்டுமே விநியோக்க அன்னவாசல் ஊராட்சி செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு குளோரின் கலந்த குடிநீரை மட்டுமே விநியோக்க அன்னவாசல் ஊராட்சி செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 
புதுகை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், மழைக் காலங்களில் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது தொடர்பாக அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி செயலாளர்கள் மற்றும் மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்குபவர்களுக்கு அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. 
பயிற்சி முகாமிற்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் சிங்காரவேலு தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் முன்னிலை வகித்தார். முகாமில், குடிநீர் குளோரினேசன் செய்வது பற்றிய செயல்முறை விளக்கம் மற்றும் தினமும் குளோரின் கலந்த குடிநீரை மட்டுமே விநியோகிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு செய்வதன் மூலம் டைபாய்டு, மஞ்சள் காமாலை, காலரா மற்றும் எலி காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம். மேலும் முகாமில் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
முகாமில், ஊராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், பரம்பூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் அண்ணாதுரை, ஊராட்சி செயலாளர்கள், நீர்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள்  மற்றும் வட்டார சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com