கீழடியில் 33 அடி ஆழம் வரை அகழாய்வு செய்ய வேண்டும்

கீழடியில் 33 அடி வரையிலும் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்றார் பாஜகவின் தேசியச் செயலர் ஹெச். ராஜா வலியுறுத்தியுள்ளார்

கீழடியில் 33 அடி வரையிலும் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்றார் பாஜகவின் தேசியச் செயலர் ஹெச். ராஜா வலியுறுத்தியுள்ளார். 
புதுக்கோட்டையில் சனிக்கிழமை மாலை அவர் அளித்த பேட்டி: 
தமிழகத்தில் அண்மைக்காலமாக ஹிந்து விரோத செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. பகவத் கீதை உள்ளிட்டவற்றை இழிவாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது. வைகோ தேசத் துரோகி என்று நான் கூறவில்லை. நீதிமன்றமே அவர் ஒரு தேசத் துரோகி என்று கூறியுள்ளது. 
திமுக மற்றும் அதன் இலவச இணைப்புக் கட்சிகள் அனைத்தும் ஹிந்து விரோத தீய சக்திகள். குர்ஆன் மற்றும் பைபிளைப் பற்றி அவர்கள் விமர்சனம் செய்யாதது அதன் மேல் உள்ள மரியாதைக்காக அல்ல. அதற்கு எதிர்வினை வரும் என்பதற்காகத் தான். 
ஹிந்துக்களை மட்டும் குறிவைத்துப் பேசினால் எதிர்காலத்தில் இந்தக் கட்சிகள் எதிர் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் ஆரிய - திராவிட இன பாகுபாடு தவிடுபொடி ஆகி விட்டது.  2,600 ஆண்டுகளுக்கு முன்னர் என்று நான் சுருக்க விரும்பவில்லை. தற்போது 15 அடி ஆழத்தில் தான் அகழ்வாராய்ச்சி நடந்துள்ளது. தமிழக அரசு இதை நிறுத்தாமல் 33 அடி வரை அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும். அப்போதுதான் முழுமையான பழைமையான நாகரிகம் வெளிப்படும்.  அமைச்சர் பாண்டியராஜன் மத்திய அரசிடம் கீழடி குறித்துப் பேசி உள்ளார். மத்திய அரசு கீழடி அகழ்வாராய்ச்சி நிதி உதவி அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதிமுக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் உள்ளது. தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அவர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொள்வது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்றார் ராஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com