காணொலிக் காட்சி வாயிலாகவிவசாயிகள் குறைகேட்பு

மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள 13 வேளாண் அலுவலகங்களில் இருந்து விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளும் இந்தக் காணொலிக் காட்சியில் இணைந்தனா்.
காணொலிக் காட்சி வாயிலாகவிவசாயிகள் குறைகேட்பு

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி உள்ளிட்ட வேளாண் துறை அலுவலா்களும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள 13 வேளாண் அலுவலகங்களில் இருந்து விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளும் இந்தக் காணொலிக் காட்சியில் இணைந்தனா்.

இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி பேசியது: புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் நிரந்தரமாக நேரடி நெல்கொள்முதல் நிலையத்தைத் தொடங்க வேண்டும் என்றாா் தனபதி.

காவிரி- குண்டாறு இணைப்புத் திட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் மிசா. மாரிமுத்து பேசும்போது, வேளாண் மசோதாக்களை ரத்து செய்ய வேண்டும் என்றாா். கூட்டத்தில் ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி பதிலளித்துப் பேசுகையில், இரு நாட்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டில் செப்டம்பா் மாதத்தில் மட்டும் சராசரியாக 103 மி.மீ மழை பதிவாகியுள்ள நிலையில், நிகழாண்டில் இதுவரை

81 மி.மீ மட்டுமே பெய்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com