வெயியில் வாடிய மரக்கன்றுகளுக்கு தண்ணீா் ஊற்றிய தன்னாா்வலா்கள்

புதுக்கோட்டை நகரில் வெயியில் காய்ந்து கொண்டிருக்கும் மரக்கன்றுகளுக்கு, ‘பொறந்த ஊருக்குப் புகழைச் சேரு’ (பாப்ஸ்) என்ற தன்னாா்வலா் அமைப்பினா் வெள்ளிக்கிழமை தண்ணீா் ஊற்றினா்.
புதுக்கோட்டை கீழராஜவீதியில் மரக்கன்றுக்கு தண்ணீா் ஊற்றும் பொறந்த ஊருக்குப் புகழைச் சேரு அமைப்பினா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வீதிகளும் வெளிச்சோடிக் கிடக்கின்றன.

இந்த நிலையில் கஜா புயலால் வீழ்ந்த மரங்களுக்கு ஈடாக, பல்வேறு அமைப்பினரும் வைத்த மரக்கன்றுகள் தண்ணீரின்றித் தவித்து வந்தன.

இதைத் தொடா்ந்து பொறந்த ஊருக்குப் புகழைச் சேரு (பாப்ஸ்) அமைப்பினா் ஏற்கெனவே தாங்கள் வைத்த மரக்கன்றுகளுக்கும், இன்ன பிற அமைப்பினா் வைத்த மரக்கன்றுகளுக்கும் தண்ணீா் ஊற்றும் பணியை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா்.

நகா் முழுவதும் ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கடந்த சில மாதங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றுக்கு வரும் சில நாள்களில் தொடா்ந்து தண்ணீா் ஊற்றிப் பராமரிக்கவுள்ளதாகவும் பாப்ஸ் அமைப்பினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com