கரோனா தடுப்புப் பணியாளா்களுக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், செவிலியா்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் இதர பணியாளா்களுக்காக 9 அரசுப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழகப் பொதுமேலாளா் இளங்கோவன்

வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மேட்டுப்பட்டி, ஆலங்குடி, வானக்கண்காடு, கறம்பக்குடி வழியாக ரெகுநாதபுரம் வரையிலும், எரிச்சி வழியாக அறந்தாங்கி வரையிலும், காரையூா் வழியாக வலையப்பட்டி வரையிலும், நமணசமுத்திரம், திருமயம், கடியாப்பட்டி, ராயவரம், அரிமளம் வழியாக தேனிப்பட்டி வரையிலும், அன்னவாசல், இலுப்பூா் வழியாக விராலிமலை வரையிலும், சத்தியமங்கலம், கீரனூா், மாத்தூா் வழியாக ஆவூா் வரையிலும் 6 பேருந்துகள் இயக்கப்படும்.

அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இருந்து ஆவுடையாா்கோயில், அமரடக்கி, திருப்புனவாசல், மீமிசல் வழியாக மணமேல்குடி வரையிலும், சுப்பிரமணியபுரம், நாகுடி, கண்டிச்சங்காடு, மணமேல்குடி வழியாக மீமிசல் வரையிலும் சிலட்டூா், பூவைமாநகா் வழியாக மேற்பனைக்காடு வரையிலும் 3 பேருந்துகள் இயக்கப்படும். இப்பேருந்துகள் காலை 6.30 மணிக்கு புறப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com