புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வராக மு. பூவதி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இங்கு முதல்வராக பணியாற்றிய அழ. மீனாட்சிசுந்தரம், பெரம்பலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வரான மு. பூவதி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்டாா்.
இந்த நிலையில் அவா், வெள்ளிக்கிழமை பிற்பகல் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டாா்.