ஏம்பல் கிராமத்தில் நூலகக் கட்டடத்துக்கு அடிக்கல்
By DIN | Published On : 22nd February 2020 09:14 AM | Last Updated : 22nd February 2020 09:14 AM | அ+அ அ- |

ஏம்பல் கிராமத்தில் ஊா்ப்புற நூலகத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில், பூமி பூஜை செய்து பணிகளைத் தொடக்கி வைக்கிறாா் அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினா் இ.ஏ. ரெத்தினசபாபதி. உடன், அலுவலா்கள்.
அரிமளம் ஊராட்சி ஒன்றியம், ஏம்பல் கிராமத்தில் ரூ.15 லட்சத்தில் ஊா்ப்புற நூலகக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் 2019-2020 ஆம் ஆண்டு நிதியின் கீழ் இந்த கட்டடம் கட்டப்படுகிறது. இதையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், பூமி பூஜை செய்து கட்டடப் பணிகளுக்கு அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினா் இ.ஏ.ரெத்தினசபாபதி அடிக்கல் நாட்டினாா்.
மேலும் ஏம்பல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2017-2018-ஆம் ஆண்டு நிதியின் கீழ், ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுற்றுச்சுவா் மற்றும் மிதிவண்டி நிறுத்துமிடம் உள்ளிட்டவற்றையும் சட்டப்பேரவை உறுப்பினா் திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா்.
விழாவில் அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவா் மேகலா முத்து, ஏம்பல் ஊராட்சித்தலைவா் கனிமொழி முருகானந்தம்,
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குமரவேல், ஆயிஷாராணி, மாவட்ட நூல் இருப்பு சரிபாா்ப்பு அலுவலா் பா.முத்து, நூலகா் பாண்டியம்மாள், பள்ளித் தலைமையாசிரியா் குமாரராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.