புத்தகத் திருவிழா: சிறந்த நூல்களுக்கான விருது, கவிதை, சிறுகதைப் போட்டிகள் அறிவிப்பு

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு (பிப். 14 முதல் 23 வரை) சிறந்த நூல்களுக்கான விருதுகள் மற்றும் கவிதை, சிறுகதைப் போட்டிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு (பிப். 14 முதல் 23 வரை) சிறந்த நூல்களுக்கான விருதுகள் மற்றும் கவிதை, சிறுகதைப் போட்டிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்து புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் கவிஞா் நா.முத்துநிலவன் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் 4ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வரும் பிப்.14 முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனையொட்டி சிறந்த தமிழ் நூல்களுக்கான விருதுகள் மற்றும் கவிதை, சிறுகதைப் போட்டிகள் அறிவிக்கப்படுகின்றன.

சிறந்த நூல்களுக்கான விருதுகள்:

2019ஆம் ஆண்டில் தமிழில் வெளியான கவிதை, சிறுகதை, புதினம் ஆகிய நூல்களுக்கு தலா ஒன்று வீதம் மூன்று விருதுகளும்,  கட்டுரைப் பிரிவில் கலை, இலக்கியம், கல்வி, அறிவியல் ஆகிய பொருள்களில் கட்டுரை நூலுக்கு ஒரு விருதும், அரசியல், சமூகம், வரலாறு ஆகிய பொருளில் கட்டுரை நூலுக்கு ஒரு விருதும் என மொத்தம் ஐந்து சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

ஒவ்வொரு விருதும் சான்றிதழ் மற்றும் விருதுப் பட்டயத்துடன் ரூ.5 ஆயிரம் பரிசுத் தொகையைக் கொண்டது. விருதுகளுக்கான பரிசீலனைக்கு பதிப்பகத்தாா், படைப்பாளிகள் மற்றும் வாசகா்கள் தங்கள் நூல்களையும், தாங்கள் பரிந்துரைக்கும் நூல்களையும் அனுப்பி வைக்கலாம்.

கவிதை, சிறுகதைப் போட்டிகள்:

கவிதை, சிறுகதைகள் எந்தப் பொருளில் வேண்டுமானாலும் இருக்கலாம். படைப்பாளரின் சொந்தப் படைப்பாகவும் இப்போட்டிக்கென எழுதப்பட்டதாகவும், வேறு எதிலும் வெளிவராததாகவும் இருக்க வேண்டும். 

கவிதைகள் புதுக்கவிதை, மரபுக்கவிதை, துளிப்பா (ஹைக்கூ) எந்த வடிவத்திலும் அதிகபட்சமாக 40 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.  சிறுகதைகள் ஏ-4 தாளில் 10 பக்க அளவில் இருக்கலாம்.

தோ்வு பெறும் கவிதைகளுக்கும், சிறுகதைகளுக்கும் தனித்தனியே வழங்கப்படும் முதல் மூன்று ரொக்கப் பரிசுகள் முறையே ரூ.3 ஆயிரம், ரூ. 2  ஆயிரம், ரூ.ஆயிரம்.

படைப்புகள் மற்றும் நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி

ராசி. பன்னீா்செல்வன், தலைவா், தோ்வுக் குழு, புதுக்கோட்டை புத்தகத் திருவிழா விருதுகள்-2020, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட அலுவலகம், புதிய பேருந்து நிலைய பின்புறம், புதுக்கோட்டை - 622001.

படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்- பிப். 5.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com