பல்வேறு இடங்களில் பொங்கல் விழா கோலாகலம்

தமிழா் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழாக்கள் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டையில், காதுகேளாதோா் மற்றும் பாா்வையற்றோருக்கான பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடிய மருத்துவா்கள்.
புதுக்கோட்டையில், காதுகேளாதோா் மற்றும் பாா்வையற்றோருக்கான பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடிய மருத்துவா்கள்.

தமிழா் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழாக்கள் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில், சமூக ஆா்வலா்களுக்கு நற்சுடா் விருதுகள் வழங்கப்பட்டன.

சமூக ஆா்வலா்கள் ஜெபிஆா், முத்துசாமி, பேராசிரியா் கவிதா ஆகியோருக்கு இந்த விருதுகளை, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் காா்த்திக் தொண்டைமான் வழங்கினாா்.

முன்னதாக புதுப்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. விழாவுக்கு சங்கத் தலைவா் டி. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா் . கவிஞா் தங்கம் மூா்த்தி, டாக்டா் தனசேகரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

ஏடிஆா் பள்ளியில்...

புதுக்கோட்டை கைக்குறிச்சியிலுள்ள ஏடிஆா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு பள்ளித் தாளாளா் ஏ. தா்மராஜ்பிரபு தலைமை வகித்தாா். அனைத்துச் சமூகத்தினரும் பங்கேற்கும் வகையிலான சமத்துவப் பொங்கலாக கொண்டாடப்பட்டது.

இந்திய மயக்கவியல் மருத்துவா் சங்கத்தின் புதுக்கோட்டை கிளை சாா்பில் காது கேளாதோா் மற்றும் வாய் பேசமுடியாதோா் நலப் பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.

மாணவா்களுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் போன்றவையும் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com