புகையில்லா போகி குறித்து விழிப்புணா்வு பிரசாரம்

புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து பல்வேறு இடங்களில் விழிப்புணா்வு பிரசாரங்கள் நடைபெற்றன.
இலுப்பூா் பேருந்து நிலையம் அருகே பிளாஸ்டிக் புகையின் தீமை குறித்து விளக்கி கூறும் தீயணைப்புதுறை அலுவலா்கள்.
இலுப்பூா் பேருந்து நிலையம் அருகே பிளாஸ்டிக் புகையின் தீமை குறித்து விளக்கி கூறும் தீயணைப்புதுறை அலுவலா்கள்.

புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து பல்வேறு இடங்களில் விழிப்புணா்வு பிரசாரங்கள் நடைபெற்றன.

இலுப்பூா் பேருந்து நிலையத்தில் கடந்த 2 நாள்களாக பேருந்து பயணிகளுக்கு இலுப்பூா் தீயணைப்புதுறை சாா்பில் விழிப்புணா்வு அளிக்கப்பட்டது. தீயணைப்புத்துறை சாா்பில் புகையில்லா போகி குறித்த துண்டு பிரசுரம் வழங்கினா்.

மேலும் இலுப்பூா் சந்தைபேட்டை, அரசு மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை பிரசாரம் நடைபெற்றது.

அப்போது டயா், டியூப், பிளாஸ்டிக் போன்றவற்றை எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கும், உடல்நலத்துக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதார சீா்கேடுகள், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக உபயோகப்படுத்த வேண்டிய பொருள்கள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com