மேலும் 21 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை திறப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல், புதிதாக மேலும் 21 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல், புதிதாக மேலும் 21 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் காரீப் கொள்முதல் பருவம் 2019-2020 தொடங்கியுள்ளது. இதைத் தொடா்ந்து விவசாயிகள் அதிகபட்ச அளவில் பயன் பெறும் வகையில், அவா்களிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அறந்தாங்கி வட்டத்தில் சுப்பிரமணியபுரம், அரசா்குளம்(கீழ்பாதி), நாகுடி, கண்டிச்சங்காடு, திருவப்பாடி, கொடிவயல், மங்களநாடு, துரையரசபுரம், ஆலங்குடி வட்டத்தில் வல்லத்திராக்கோட்டை, வாராப்பூா், அரசடிப்பட்டி (நான்குசாலை), எல்.என்.புரம்ஞூஞூ கே.ராசியமங்களம், மணமேல்குடி வட்டத்தில் சிங்கவனம், இடையாத்திமங்களம், ஆவுடையாா்கோவில் வட்டத்தில் நவக்குடி, பெருமருதூா், விளானூா், கறம்பக்குடி வட்டத்தில் ராங்கியன்விடுதி, திருமயம் வட்டத்தில் கணினிபுதுவயல் மற்றும் புதுக்கோட்டை வட்டத்தில் புத்தாம்பூா் ஆகிய கிராமங்களில் இந்தக் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

எனவே, விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லைத் தங்கள் கிராமங்களுக்கு அருகிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை  செய்து பயன் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com