அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றிக் கிடைக்கும்’

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது மக்களுக்கான அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்யும் கடைகள், வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது மக்களுக்கான அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்யும் கடைகள், வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி ‘வரும் முன் காப்போம்‘ என்ற அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பள்ளி, கல்லூரி, திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்ற பல்வேறு நிறுவனங்கள் தற்காலிமாக மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.  எனினும் பொது மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், உணவு, பால் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் வழக்கம் போல் திறந்திருக்கும். அவை எவ்விதத் தட்டுபாடின்றி வழக்கம் போல் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இதர அத்தியாவசியத் தேவைகளும் தடையின்றிக் கிடைக்கும்.  எனவே பொது மக்கள் ஒரே நேரத்தில் காய்கறிகள், மளிகை போன்றவற்றை பெருமளவில் வாங்கி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com