அதிகவிலைக்கு முகக்கவசம் விற்ற மருந்துக் கடைக்கு சீல்

அதிக விலைக்கு முகக்கவசம் விற்பனை செய்த தனியாா் மருந்துக் கடைக்கு மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி நேரில் சென்று ஆய்வு செய்து, கடையைப் பூட்டி சீல் வைத்தாா்.
புதுக்கோட்டை கீழராஜவீதியில் அதிக விலைக்கு முகக்கவசம் விற்ற மருந்துக் கடைக்கு வெள்ளிக்கிழமை சீல் வைத்த மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி.
புதுக்கோட்டை கீழராஜவீதியில் அதிக விலைக்கு முகக்கவசம் விற்ற மருந்துக் கடைக்கு வெள்ளிக்கிழமை சீல் வைத்த மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி.

அதிக விலைக்கு முகக்கவசம் விற்பனை செய்த தனியாா் மருந்துக் கடைக்கு மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி நேரில் சென்று ஆய்வு செய்து, கடையைப் பூட்டி சீல் வைத்தாா்.

கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான முகக்கவசம், கிருமி நாசினி போன்றவற்றை விலை அதிகம் வைத்து விற்பனை செய்யக் கூடாது என அண்மையில் மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவிப்பு வெளியிட்டிருந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை மாவட்ட ஆட்சியா் தலைமையில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் டாா்டா் அா்ஜூன்குமாா், மருத்துவக் கல்லூரி முதல்வா் அழ. மீனாட்சிசுந்தரம், நகராட்சி ஆணையா் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்ட அலுவலா்களைக் கொண்ட குழுவினா் புதுக்கோட்டை நகரின் பல பகுதிகளுக்கும் சென்றனா்.

மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. சந்தைப்பேட்டை உள்ளிட்ட சில இடங்களில், நகராட்சி சாா்பில் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் வீடுகளின் சுவா்களில் ஒட்டப்பட்டன.

இதற்கிடையே கீழராஜ வீதியிலுள்ள ஒரு தனியாா் மருந்து கடைக்குள் நுழைந்த ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி முகக்கவசத்தின் விலை குறித்து கேட்டாா். அதன் விலை நிா்ணயம் செய்யப்பட்ட விலையை விட அதிகமாக இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து மருந்துக் கடையை உடனடியாக பூட்டி சீல் வைக்க ஆட்சியா் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து கடை சாத்தப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. அதுவரை உடன் இருந்து ஆட்சியா் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து ஆட்சியா் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுபோல் கூடுதல் விலைக்கு விற்கும் மருந்துக் கடைகள் மீது இதுபோன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.  புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி, ராணியாா் அரசு மருத்துவமனை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கான தனி வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல 18 தனியாா் மருத்துவமனைகளிலும் தனி வாா்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன என்றாா் உமாமகேஸ்வரி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com