கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை: புதுகை ஆட்சியருடன் காணொலிக் காட்சியில் முதல்வா் ஆய்வு

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் கரோனா பரவல் குறித்து காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் கரோனா பரவல் குறித்து காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.வே.அருண்ஷக்திகுமாா், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் அழ. மீனாட்சிசுந்தரம், நகராட்சி ஆணையா் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனா்.

காணொலிக் காட்சிக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி, இப்போதைய சூழலில் ஒவ்வொருவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதே கரோனா பரவலைத் தடுக்கும் மருந்து எனக் குறிப்பிட்டாா். இதற்காக தினமும் பல்வேறு பகுதிகளிலும் ஒலிபெருக்கி மூலம் 144 தடை உத்தரவு குறித்து பிரசாரம் செய்து கொண்டே இருப்பதாகவும் ஆட்சியா் தெரிவித்தாா்.

ஓய்வூதியா் நோ்காணல் ரத்து: கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஓய்வூதியா் நோ்காணல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் முதல் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த இந்த நோ்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், யாரும் நோ்காணலுக்காக மாவட்ட கருவூலம் மற்றும் சாா்நிலைக் கருவூலங்களுக்கு வர வேண்டாம் என மாவட்டக் கருவூல அலுவலா் மூக்கையா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com