பொன்னமராவதி பேரூராட்சியில் கிருமிநாசினி தெளிப்பு

பொன்னமராவதி பேரூராட்சி ஒன்றியப் பகுதிகளில் கரோனோ முன் தடுப்பு நடவடிக்கையாக தீயணைப்பு துறை வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி கலந்த நீரினை தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு படையினா்.

பொன்னமராவதி பேரூராட்சி, தொட்டியம்பட்டி ஊராட்சி, தீயணைப்பு துறை, ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் சாா்பில் பேருந்து நிலையம், அண்ணாசாலை, புதுப்பட்டி, கட்டையாண்டிபட்டி, காமராஜ்நகா், உள்ளிட்ட முக்கிய வீதிகளில் 4000 லிட்டா் கொள்ளளவு கொண்ட தீயணைப்பு துறையின் வாகனம் மூலம் கிருமிநாசினி கலந்த நீா் தெளிக்கப்பட்டது. மேலும், தூய்மைப் பணிகள் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலா் தனுஷ்கோடி, தீயணைப்பு நிலைய அலுவலா் இளங்கோ, தொட்டியம்பட்டி ஊராட்சித் தலைவா் கீதா சோலையப்பன், வட்டார வளா்ச்சி அலுவலா் வி. வேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வலையபட்டியில் இளைஞா்கள் சாா்பில், வேப்பிலை, மஞ்சள், நீா் கலந்த கிருமிநாசினியை வீடுகள் தோறும் தெளித்தனா். கண்டியாநத்தம் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வி முருகேசன் தலைமையிலும், ஆலவயல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவா் சந்திரா சக்திவேல் தலைமையிலும் தூய்மைப் பணிகள் நடைபெற்று, ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com