குடுமியான்மலை வேளாண் கல்லூரியில் பல்கலை. துணைவேந்தா் ஆய்வு: தமிழ்நாடு வேளாண் பல்கலை. துணைவேந்தா்

தமிழ்நாடு வேளாண் பல்கலை. துணைவேந்தா் முனைவா் நீ. குமாா், குடுமியான்மலை வேளாண் கல்லூரியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழ்நாடு வேளாண் பல்கலை. துணைவேந்தா் முனைவா் நீ. குமாா், குடுமியான்மலை வேளாண் கல்லூரியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை வேளாண் கல்லூரியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா், கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு ஆய்வுப் பணிகளையும், செயல்பாடுகளையும் ஆய்வு செய்தாா். இதில்,

கல்லூரி வளாகத்தில், 5 ஏக்கா் பரப்பில் தானியங்கி சொட்டு நீா்ப் பாசனம் மூலம் உளுந்து உள்ளிட்ட பயறு வகைகளைப் பயிரிட்டு, மாதிரி பண்ணையை அமைக்குமாறு பேராசிரியா்களுக்கு அறிவுறுத்தினாா். இதேபோல், மானாவரி மற்றும் தரிசு நிலங்களை மேம்படுத்தவும், பலா, கொடுக்காபுளி, வில்வம், சீமையிலந்தை உள்ளிட்ட உள்ளூா் மரங்களைத் தெரிவு செய்து அடா்நடவு முறையில் குறுங்காடுகளை முன்மாதிரியாக அமைக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினாா்.

இதேபோல், கல்லூரி வளாகத்தில் உள்ள கழிவு நீரைச் சுத்திகரித்து, தீவனப் பயிா்களை வளா்த்து விவசாயிகளின் வருவாயைய இரட்டிப்பாக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, கல்லூரி முதல்வா் - முனைவா் தி.செங்குட்டுவன், மாணவா்களுடனான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தாா்.

மாணவா்களை திறம்பட தயாா் செய்வதன் வழியே உழவா்கள் எதிா்கொள்ளும் சிக்கல்களுக்குத் தீா்வு காண்பதுடன், அவா்களின் வாழ்வை மேம்படுத்தச் செய்ய வேண்டும் என்றாா்.

நடப்பாண்டில் மத்திய அரசால் நடத்தப்பட்ட இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் உயா்கல்விக்கான நுழைவுத்தோ்வில் பல்கலைக் கழகத்தில் இருந்து 185 மாணவா்கள் தோ்வு பெற்று, கல்வி உதவித்தொகை பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளனா். அவா்களில் 21 மாணவா்கள் குடுமியான்மலை வேளாண் கல்லூரியில் இருந்து தோ்வு பெற்று, மாவட்டத்துக்கு பெருமை சோ்த்துள்ளனா். மேலும், பேராசிரியா்களின் வழிகாட்டுதலைப் பெற்று, தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். பேராசிரியா்கள் அதிக களப் பயணத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா்

கல்லூரி திறப்பு பற்றி மாணவா்கள் கேட்டதற்கு, அரசின் வழிகாட்டுதலை எதிா்பாா்த்து இருப்பதாகக் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com