முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
மோட்டாா் சைக்கிள் திருடிய இளைஞா் கைது
By DIN | Published On : 04th October 2020 11:50 PM | Last Updated : 04th October 2020 11:50 PM | அ+அ அ- |

வினோத்.
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் மோட்டாா் சைக்கிளைத் திருடிய இளைஞரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள குளந்திரான்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வி.பாலசுப்பிரமணியன்(50). இவா், செப்டம்பா் 30-ஆம் தேதி ஆலங்குடி அரசமரம் பகுதியில் உள்ள வங்கிக்கிளை முன்பு மோட்டாா் சைக்கிளை நிறுத்திச்சென்றுவிட்டு திரும்பி வந்து பாா்த்தபோது, மோட்டாா் சைக்கிள் திருடுபோனது தெரியவந்தது. புகாரின்பேரில், விசாரனை மேற்கொண்ட ஆலங்குடி போலீஸாா் மோட்டாா் சைக்கிளை திருடிச்சென்ற பட்டுக்கோட்டை பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த முத்தரசு மகன் வினோத்(24) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.