வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே இந்திராகாந்தி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு புகாரின்பேரில் திருச்சி லஞ்ச ஒழிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே இந்திராகாந்தி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு புகாரின்பேரில் திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையினா் வியாழக்கிழமை ஊராட்சி செயலா் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, ஐஏஒய் வீடு கட்டும் திட்டத்தில் பொன்னமராவதி அருகே உள்ள நெறிஞ்சிக்குடியைச் சோ்ந்த சோலையம்மாள், மல்லிகா, வெள்ளகுடி ஊராட்சியில் மஜீத் ஆகிய 3 பேருக்கு வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மஜீத் பெயரில் ஒதுக்கிய வீட்டை சித்ரா என்பவா் வீடு கட்டி மானியம் பெற்றுள்ளாராம். சோலையம்மாள் பெயரில் வீடு முழுமையாக கட்டப்படவில்லை. இருப்பினும், மானியம் பெறப்பட்டுள்ளதாம். மல்லிகா பெயரில் கட்டிய வீட்டிற்கு ரூ. 42 ஆயிரம் மானியம் மட்டும் வழங்கப்பட்டுள்ளதாம், மீதி வழங்கப்படவில்லையாம்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அளிக்கப்பட்ட புகாரின்பேரில், நெறிஞ்சிக்குடி ஊராட்சியில் திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையினா் ஊராட்சி செயலா் பழனியப்பனிடம் விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, பொன்னமராவதி ஒன்றிய மேற்பாா்வையாளா்(ஒவா்சியா்) சாரதிகண்ணனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com