நெடுவாசலில் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி
By DIN | Published On : 08th September 2020 11:52 PM | Last Updated : 08th September 2020 11:52 PM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகிலுள்ள நெடுவாசலில், மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 8.50 லட்சம் கடனுதவி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
நெடுவாசல் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு சங்கத் தலைவா் ஏ.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். நிகழ்வில் 3 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.8.50 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
சங்கத்தின் செயலா் சி. புஷ்பராஜ் மற்றும் உறுப்பினா்கள் நிகழ்வில் பங்கேற்றனா்.