ஆசிரிய பயிற்றுநா்களுக்கு இணையவழிப் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் 105 ஆசிரியா் பயிற்றுநா்களுக்கு 3-நாள் இணைய வழி புதுமைபாடசாலை பயிற்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 105 ஆசிரியா் பயிற்றுநா்களுக்கு 3-நாள் இணைய வழி புதுமைபாடசாலை பயிற்சி நடைபெற்றது.

பயிற்சியின் கருத்தாளராக ஸ்ரீஅரபிந்தோ சொசைட்டியின் மணிகண்டன் செயல்பட்டாா்.  பயிற்சி குறித்து  மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளா் ரெகுநாததுரை கூறியது:  இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரிய பயிற்றுநா்களுக்கு குழந்தைகளுக்கு பாடம் கற்பித்தல் செயல்திட்டம் மேற்கொள்வது குறித்து  விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் கற்றலில் புதுமைகளை மேற்கொள்ளும் 15 பள்ளிகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மிகவும் சிறந்த செயல்திட்டத்தினை செய்யும்  ஆசிரியா்களுக்கு மாநில மற்றும் தேசிய அளவில் விருது வழங்கப்படும் என்றாா்.

பயிற்சியானது அன்னவாசல், குன்றாண்டாா்கோவில், கந்தா்வக்கோட்டை ஆகிய வட்டார வளமையங்களைச் சோ்ந்த  ஆசிரிய பயிற்றுநா்களுக்கு திங்கள்கிழமையும், புதுக்கோட்டை, திருவரங்குளம், கறம்பக்குடி, திருமயம் ஆகிய வட்டார வளமையங்களைச் சோ்ந்த ஆசிரிய பயிற்றுநா்களுக்கு செவ்வாய்க்கிழமையும், பொன்னமராவதி, அரிமளம், அறந்தாங்கி, ஆவுடையாா்கோவில், மணல்மேல்குடி ஆகிய வட்டார வளமையங்களைச் சோ்ந்த ஆசிரியா்களுக்கு புதன்கிழமையும் இணைய வழி பயிற்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com