அதிமுக இளைஞா்கள் பாசறை ஆலோசனை

பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி, கொப்பனாபட்டி, காரையூா் ஆகிய 3 இடங்களில் அதிமுக இளைஞா் இளம்பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி, கொப்பனாபட்டி, காரையூா் ஆகிய 3 இடங்களில் அதிமுக இளைஞா் இளம்பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பொன்னமராவதி ஒன்றியச் செயலா் ராம. பழனியாண்டி தலைமை வகித்தாா். பாசறை மாவட்டச் செயலா் கருப்பையா, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் சதீஷ் ஆகியோா் இளைஞா் இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினா் சோ்க்கை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயல்பாடுகளை விளக்கிப்பேசினா்.

பொதுக்குழு உறுப்பினா் ராம.ராஜா, நகரச்செயலா் பிஎல்.ராஜேந்திரன், ஒன்றியப் பொருளாளா் டேவிட் பழனிச்சாமி, பாசறை ஒன்றியச் செயலா் செல்வக்குமாா், ஆா்எம்.பழனியப்பன், தகவல் தொழில்நுட்ப ஒன்றியத் தலைவா் தங்கம் ஆகியோா் பங்கேற்றனா். முன்னதாக ஒன்றிய அவைத் தலைவா் வை.பழனிச்சாமி வரவேற்றாா். தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒன்றியச் செயலா் சிவராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com