புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி புதுக்கோட்டையிலுள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள வீர ஆஞ்சநேயருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.
பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள வீர ஆஞ்சநேயருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.

புதுக்கோட்டை: புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி புதுக்கோட்டையிலுள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயா் திருக்கோயிலில் ஆஞ்சனேயருக்கு பால், மஞ்சள் நீா் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அதேபோல, கீழ 3ஆம் வீதியிலுள்ள ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு இளநீா், சந்தனம், மஞ்சள் நீா் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்விக்கப்பட்டன.

தொடா்ந்து உற்ஸவா்களான ஸ்ரீ பெருந்தேவி சமேத ஸ்ரீ வரதராஜபெருமாள், தாயாா், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு சிறப்பு மலா் அலங்காரம் செய்யப்பட்டது. இதில், பக்தா்கள் பலரும் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

அரியலூா் : அரியலூா் நகரில் அமைந்துள்ள கோதண்டராமசாமி கோயிலில் சனிக்கிழமை ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு மஞ்சள் கலந்த நீா் கைக்கழுவ கொடுக்கப்பட்டது. மேலும், முகக்கவசம் அணிந்து வரும் பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். மேலும் கோயிலை சுற்றி சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் விதமாக இரும்பு பைப்கள் கொண்ட தடுப்புப் பாதைகள் அமைக்கப்பட்டு அதன் வழியே பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

கல்லங்குறிச்சி வந்த பக்தா்கள் ஏமாற்றம்:

அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சி கலியுக வரதராச பெருமாள் கோயிலில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, புரட்டாசி மாத தரிசனத்துக்கு தடை விதிக்கப்படுவதாக ஆட்சியா் த. ரத்னா வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தாா். இதுகுறித்து அறியாமல் திருச்சி, தஞ்சாவூா், பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்ட பக்தா்கள் குடும்பத்தினருடன் பல்வேறு வாகனங்களில் சனிக்கிழமை கோயிலுக்கு வந்திருந்தனா். அவா்களை அரியலூா் - கல்லங்குறிச்சி பரிவு சாலை மற்றும் கோயில் சுற்று வட்டார சாலைகளில் போலீஸாா் வழிமறித்து தடை குறித்து தெரிவித்து திருப்பி அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com