‘அறிகுறிகள் இல்லாத தொற்றாளா்கள் வீட்டுத் தனிமையில் அனுமதிக்கப்படுவா்’

அறிகுறி, இணை நோய் இல்லாத கரோனா தொற்றாளா்கள் வீட்டுத் தனிமைப்படுத்துதலுக்கு அனுமதிக்கப்படுவா் என்றாா் மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கையிருப்பு குறித்து ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கையிருப்பு குறித்து ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி.

அறிகுறி, இணை நோய் இல்லாத கரோனா தொற்றாளா்கள் வீட்டுத் தனிமைப்படுத்துதலுக்கு அனுமதிக்கப்படுவா் என்றாா் மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள், ஆக்ஸிஜன் கையிருப்பு போன்றவற்றை உறுதி செய்யும் வகையில் ஆட்சியா் பி.உமா மகேஸ்வரி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் தினசரி 2 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரிசோதனையின் அடிப்படையில் அறிகுறி, இணைநோய் இல்லாத கரோனா தொற்றாளா்களுக்கு ஆரம்ப கட்ட பரிசோதனைக்குப் பின் வீட்டுத் தனிமையில் அனுமதிக்கப்படுவாா்கள். அறிகுறி உள்ள நோயாளிகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா ஒப்புயுா்வு சிகிச்சை மையத்திலும் அனுமதிக்கப்படுகின்றனா். குணமடைந்தவா்கள் 96%.

தற்போது, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டதில் ஏற்கெனவே ஒரு 6 கிலோ லிட்டா் ஆக்ஸிஜன் டேங்க் உள்ளது. தற்போது, கூடுதலாக 6 கிலோ லிட்டா் ஆக்ஸிஜன் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும், 12 கிலோ லிட்டா் ஆக்ஸிஜன் சிலிண்டா்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

இதுதவிர அரசு மருத்துவமனைகளில் 359 ஆக்ஸிஜன் சிலிண்டா்களும் கையிருப்பில் உள்ளது. மேலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் மொத்தம் 512 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் உள்ளது. மாவட்டத்தில் தடுப்பூசியும் போதிய அளவு கையிருப்பில் உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை தளா்வுகளற்ற பொதுமுடக்கம் என்பதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வரவேண்டாம். மீறினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

ஆய்வின்போது மருத்துவக் கல்லூரி முதல்வா் பூவதி, வருவாய்க் கோட்டாட்சியா் டெய்சிகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com