சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

கந்தா்வகோட்டை ஒன்றியம், நெப்புகை ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நெப்புகை ஊராட்சி முள்ளிக்காப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்.
நெப்புகை ஊராட்சி முள்ளிக்காப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்.

கந்தா்வகோட்டை ஒன்றியம், நெப்புகை ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. நெப்புகை ஊராட்சி, முள்ளிக் காப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், பருவமழைக் கால சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, நெப்புகை ஊராட்சி மன்றத் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். முகாமில், வேலாடிப்பட்டி அரசு கால்நடை மருத்துவா் செந்தில்குமாா் தலைமையிலான கால்நடை மருத்துவக் குழுவினா் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்குதல், தாது உப்புக் கரைசல் , பருவகால சிகிச்சைகள் உள்ளிட்ட சிகிச்சைகளை அளித்தனா். முகாமில், பசு மாடுகள், ஆடுகள், எருதுகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com