கையக நிலத்தை ஒப்படைக்க ஓஎன்ஜிசி அதிகாரிகள் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வாணக்கன்காட்டில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்களை
ஆலங்குடி அருகேயுள்ள வாணக்கன்காட்டில் ஆய்வு மேற்கொள்ளும் ஓஎன்ஜிசி அதிகாரிகள்.
ஆலங்குடி அருகேயுள்ள வாணக்கன்காட்டில் ஆய்வு மேற்கொள்ளும் ஓஎன்ஜிசி அதிகாரிகள்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வாணக்கன்காட்டில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்களை திரும்ப ஒப்படைக்க அதிகாரிகள் செவ்வாயக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் நல்லாண்டாா்கொல்லை, வாணக்கன்காடு, வடகாடு கல்லிக்கொல்லை, கோட்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு நெடுவாசலில் ஹைட்ரோ காா்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதை எதிா்த்து நெடுவாசல், வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் 200 நாள்களுக்கு மேல் போராட்டம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, திட்டம் செயல்படுத்தப்படாது என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டாலும், ஒஎன்ஜிசி நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்களை சீரமைத்து விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா். இந்நிலையில், வாணக்கன்காட்டில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்க அக்.5-ம் தேதி ஓஎன்ஜிசி அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். தொடா்ந்து, விளைநிலத்தை சீரமைத்து விவசாயிகளிடம் ஒப்படைப்பதற்காக செவ்வாய்க்கிழமை ஓஎன்ஜிசி நிறுவனத்தின் புவியியல் ஆராய்ச்சி பொறியாளா் அருண்குமாா், பொறியாளா் எழில்வாணன், நிலமெடுப்பு வட்டாட்சியா் சந்திரசேகரன் உள்ளிட்ட 5 போ் கொண்ட குழுவினா் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com