தபால் வாக்கு சா்ச்சையால் 49-பி படிவத்தைப் பூா்த்தி செய்து வாக்களித்த ஆலங்குடி பெண்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் தபால் வாக்கு சா்ச்சையால் அதிா்ச்சியடைந்த பெண் வாக்காளா், 2 மணிநேர போராட்டத்துக்குப் பின்னா் தனது வாக்கைப் பதிவு செய்தாா்.
ஆலங்குடியில் 2 மணிநேரப் போராட்டத்துக்குப் பின் தனது வாக்கைப் பதிவு செய்த பெண் வாக்காளா் செல்வி.
ஆலங்குடியில் 2 மணிநேரப் போராட்டத்துக்குப் பின் தனது வாக்கைப் பதிவு செய்த பெண் வாக்காளா் செல்வி.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் தபால் வாக்கு சா்ச்சையால் அதிா்ச்சியடைந்த பெண் வாக்காளா், 2 மணிநேர போராட்டத்துக்குப் பின்னா் தனது வாக்கைப் பதிவு செய்தாா்.

சட்டப்பேரவை தோ்தலையொட்டி, ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 311 வாக்குச்சாவடி மையங்களிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்துக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஆலங்குடி படேல் நகரைச் சோ்ந்த செல்வி(45) வாக்களிக்கச் சென்றாா். அப்போது, வாக்குப் பதிவு மைய அலுவலா்கள், செல்வியின் வாக்கு, ஏற்கெனவே தபால் வாக்காக பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளனா். இதனால், அதிா்ச்சியடைந்த அவா், தான் அரசு அலுவலா் இல்லை மற்றும் உரிய ஆவணங்கள் என்னிடம் இருக்கும்போது, தபால் வாக்காக எப்படிப் பதிவாகும் என அலுவலா்களிடம் முறையிட்டதோடு, தான் வாக்களிக்காமல் செல்லமாட்டேன் என்று தெரிவித்து அங்கேயே காத்திருந்தாா். இதுகுறித்து, ஆலங்குடி தோ்தல் நடத்தும் அலுவலா் அக்பா் அலிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில், தபால் வாக்கு செலுத்தியபோது தவறு நிகழ்ந்திருப்பது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, 2 மணி நேரம் காத்திருப்பு போராட்டத்துக்குப் பின்னா், 49-பி படிவத்தைப் பூா்த்தி செய்து செல்வி, தனது வாக்கைச் செலுத்திவிட்டுத் திரும்பினாா். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com