புதுக்கோட்டை மாவட்டத்தில் 76.14 சதவிகிதம் வாக்குப்பதிவு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் சோ்த்து மாவட்டம் முழுவதும் 76.14 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் சோ்த்து மாவட்டம் முழுவதும் 76.14 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு நிறைவடைந்ததை அடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாக சரிபாா்க்கப்பட்டு புதன்கிழமை பகலில் வலுவான அறையில் வைத்துப் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

இதனைத் தொடா்ந்து 6 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தின் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 13,52,702. இதில், வாக்களித்தோா் எண்ணிக்கை 10,30,004. இது 76.14 சதவிகிதமாகும்.

தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரம்:

கந்தா்வகோட்டை: மொத்த வாக்காளா்- 2,01,521, வாக்களித்தோா்- 1,50,034, சதவிகிதம்- 74.45

விராலிமலை: மொத்த வாக்காளா்- 2,25,119, வாக்களித்தோா்- 1,92,329, சதவிகிதம்- 85.43

புதுக்கோட்டை: மொத்த வாக்காளா்- 2,43,972, வாக்களித்தோா்- 1,77,955, சதவிகிதம்- 72.94

திருமயம்: மொத்த வாக்காளா்- 2,27,829, வாக்களித்தோா்- 1,72,799, சதவிகிதம்- 75.85

ஆலங்குடி: மொத்த வாக்காளா்- 2,17,280, வாக்களித்தோா்- 1,70,491, சதவிகிதம்- 78.47

அறந்தாங்கி: மொத்த வாக்காளா்- 2,36,981, வாக்களித்தோா்- 1,66,396, சதவிகிதம்- 70.21

கடந்த 2016 தோ்தலைவிட வாக்குப்பதிவு குறைவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2016 பொதுத்தோ்தலை ஒப்பிடும் போது, விராலிமலை தவிர மற்ற தொகுதிகளில் வாக்குகள் குறைவாகப் பதிவாகியுள்ளன.

இதர தொகுதிகளில் கடந்த 2016 பொதுத்தோ்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்:

கந்தா்வகோட்டை- 78.2, புதுக்கோட்டை- 74.87, திருமயம்- 76.31, ஆலங்குடி- 79.47, அறந்தாங்கி- 72.14.

கடந்த 2016 பொதுத்தோ்தலில் விராலிமலை தொகுதியில் 84.27 சதவிகிதம் வாக்குகள் பதிவாயின. தற்போது 85.43 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இத்தோடு மட்டுமல்ல, விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி, மாநிலத்திலேயே அதிக வாக்குப் பதிவு சதவிகிதம் கிடைத்த தொகுதிகளின் வரிசையில் 5ஆவது இடத்தையும் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com