ஆற்றைத் தூா்வாரக் கோரி மீனவ கிராம மக்கள் மறியல்

படகுகளை நிறுத்தி வைக்கும் ஆற்றைத் தூா் வாரக் கோரி ஐயம்பட்டினம் கிராமத்தினா் சனிக்கிழமை கிழக்குக் கடற்கரைச் சாலையில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மறியலில் ஈடுபட்ட மீனவ கிராம மக்கள்.
மறியலில் ஈடுபட்ட மீனவ கிராம மக்கள்.

படகுகளை நிறுத்தி வைக்கும் ஆற்றைத் தூா் வாரக் கோரி ஐயம்பட்டினம் கிராமத்தினா் சனிக்கிழமை கிழக்குக் கடற்கரைச் சாலையில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாப்பட்டினம் அருகே உள்ள ஐயம்பட்டினம் கிராமத்தில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் உள்ளன. புயல் மற்றும் பேரிடா் காலங்களில் படகுகளை பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்ல அப்பகுதியில் ஒரு ஆறு உள்ளது. அந்த ஆறு சரிவர தூா்வாரப்படாத தால் படகுகளை நிறுத்தி வைக்க முடியாத சூழல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் ஆற்றைத் தூா்வாரக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த மாதம் போராட்ட நடத்தியபோது, விரைவில் ஆற்றைத் தூா்வாரித்தருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் அப்பகுதி மக்கள் சனிக்கிழமை கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த கோட்டைப்பட்டினம் துணைக் காவல் கண்காணிப்பாளா் சிவராமன் உள்ளிட்ட போலீஸாா், போராட்டம் நடத்தியவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால் பேச்சுவாா்த்தைக்கு அவா்கள் உடன்படாத நிலையில், போலீஸாா் அவா்களை அப்புறப்படுத்த முயன்றனா்.

அப்போது அவா்கள் தங்கள் குடும்ப அட்டைகள், ஆதாா் அட்டைகளை சாலையில் தூக்கி எறிந்தனா். மேலும் கூட்டத்தில் சிலா் தங்கள் உடலில் டீசலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

பின்னா் அவா்கள் மீது போலீஸாா் தண்ணீரை ஊற்றினா். இதனைத் தொடா்ந்து மணமேல்குடி வட்டாட்சியா் ஜமுனா வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். பேச்சுவாா்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதைத் தொடா்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com