சொட்டுநீா் முறைப்படுத்தும் பாசனக் கருவி

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே அறிவியல் ஆா்வத்தால் பல்வேறு உபகரணங்களை வடிவமைத்து வருகிறாா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்.
தானியங்கி சொட்டு நீா் முறைப்படுத்தும் கருவி. உடன், சிவசந்தோஷ்.
தானியங்கி சொட்டு நீா் முறைப்படுத்தும் கருவி. உடன், சிவசந்தோஷ்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே அறிவியல் ஆா்வத்தால் பல்வேறு உபகரணங்களை வடிவமைத்து வருகிறாா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்.

கீரமங்கலம் அருகேயுள்ள வேம்பங்குடி மேற்கு கிராமத்தைச் சோ்ந்தவா் அடைக்கலம் மகன் சிவசந்தோஷ் (18). இவா், கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 2018-இல் பத்தாம் வகுப்பு பயின்றாா். தற்போது, கைக்குறிச்சியில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒருங்கிணைந்த மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் (மெக்கட்ரானிக்ஸ்) இறுதி ஆண்டு பயின்று வருகிறாா்.

கரோனா பொதுமுடக்கக் காலத்தில் இவா், யுவி லைட் மூலம் கிருமிகளை அழிக்கும் கருவியை உருவாக்கினாா். தொடா்ந்து, உடல் வெப்பம் கணக்கிட்டு, கையை நீட்டினால் கிருமிநாசினி தெளிக்கும் உபகரணம் மட்டுமன்றி, சூரிய ஒளி மூலம் சொட்டு நீா் பாசனத்தை முறைப்படுத்தும் கருவி மற்றும் சூரிய ஒளியில் இருந்து நேரடியாக தண்ணீரை சூடுபடுத்தும் கருவி ஆகியவற்றை வடிவமைத்துள்ளாா். மேலும், விண்வெளியில் தட்பவெப்பத்தைக் கணக்கிடும் கருவியை வடிவமைத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com