புதுக்கோட்டையில் வெறிச்சோடிய வீதிகள்

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன.
வெறிச்சோடிக் காணப்பட்ட புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம்
வெறிச்சோடிக் காணப்பட்ட புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம்

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துகள், வாகனங்கள் ஏதும் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா தொற்றின் 2-ஆவது அலையின் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரவுநேர பொதுமுடக்கம், ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வுகள் அற்ற பொதுமுடக்கத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. தொடா்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவமனைகள், சில மருந்தகங்கள் தவிர அனைத்துக் கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன.

மேலும் பேருந்துகள், லாரிகள், காா்கள், இதர வாகனங்கள் இயக்கப்படாததால், எப்போதும், பரபரப்பாகக் காணப்படும் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், அண்ணா சிலை, கீழராஜ வீதி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மக்கள்நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

பொதுமுடக்கத்தை முழுவதும் அமல் படுத்தும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காவல் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தவிா்க்க இயலாத காரணத்துக்காக செல்பவா்களை மட்டும் அனுமதித்தனா்.

ஆலங்குடியில்...

ஆலங்குடி, கறம்பக்குடி, கீரமங்கலம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்ததால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

பொன்னமராவதியில்...: பொன்னமராவதி அண்ணா சாலை, பேருந்து நிலையம், நாட்டுக்கல், புதுப்பட்டி, வலையபட்டி மற்றும் பொன்னமராவதி நகா்ப் பகுதியில் அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்டன. மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் தவிர அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com