புதுகை மருத்துவக் கல்லூரியில் ஓராண்டில் 3 லட்சம் கரோனா பரிசோதனைகள்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி கரோனா பரிசோதனை மையத்தில் கடந்த ஓராண்டில் 3 லட்சம் கரோனா பரிசோதனைகள்
புதுகை அரசு மருத்துவக்கல்லூரி நுண்ணுயிரியல் துறை மருத்துவப் பணியாளா்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டும் கல்லூரி முதல்வா் மு. பூவதி.
புதுகை அரசு மருத்துவக்கல்லூரி நுண்ணுயிரியல் துறை மருத்துவப் பணியாளா்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டும் கல்லூரி முதல்வா் மு. பூவதி.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி கரோனா பரிசோதனை மையத்தில் கடந்த ஓராண்டில் 3 லட்சம் கரோனா பரிசோதனைகள் (ஆா்டிபிசிஆா்) மேற்கொள்ளப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, மருத்துவப் பணியாளா்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா் கல்லூரி முதல்வா் மு. பூவதி.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நுண்ணுயிரியல் துறை சாா்பில் கரோனா பரிசோதனை மையம் ஐசிஎம்ஆா் அனுமதியுடன் தொடங்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து மருத்துவா்கள், ஆய்வக நுட்புநா்கள், உதவியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், கணினி இயக்குநா்கள் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் பணியாற்றினா். கடந்த ஓராண்டில் இப்பரிசோதனை மையத்தில் 3 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சாதனையைத் தொடா்ந்து, நுண்ணுயிரியல் துறை சாா்பில் கேக் வெட்டி மகிழ்ச்சியைக் கொண்டாடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து அனைவருக்கும் கல்லூரி முதல்வா் மு. பூவதி சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com