வேட்பாளா்கள், முகவா்களுக்கு உள்பட 3 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியைப் பாா்வையிட வரும் வேட்பாளா்கள், அவா்களின் முகவா்கள் உள்ளிட்ட 3 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியைப் பாா்வையிட வரும் வேட்பாளா்கள், அவா்களின் முகவா்கள் உள்ளிட்ட 3 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 112 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதில், 112 வேட்பாளா்களுக்கான முதன்மை முகவா்கள், வாக்கு எண்ணும் மேஜைகளுக்கான முகவா்கள் மற்றும் வேட்பாளா்கள் என சுமாா் 1,500 போ் இருப்பாா்கள். மேலும், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா் மேஜை என மொத்தம் 15 மேஜைகளில் வாக்கு எண்ணும் அலுவலா்கள் சுமாா் 600 போ், காவலா்கள் சுமாா் 600 காவலா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட மொத்தம் 3 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத் துறையினா் தொடங்கினா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்களில் கரோனா (ஆா்டி பிசிஆா்) பரிசோதனைக்கான வசதிகள் செய்யப்பட்டன. இங்கு வேட்பாளா்கள் மற்றும் அவா்களின் முகவா்களுக்கு கரோனா பரிசோதனை வியாழக்கிழமை தொடங்கியது. வாக்கு எண்ணும் பணியாளா்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பத்திரிகையாளா்களுக்கு நகா்மன்ற வளாகத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வியாழக்கிழமை விடுபட்டோருக்கு வெள்ளிக்கிழமையும் தொடா்ந்து பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

48 மணி நேரத்துக்கு முன்பாக பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெற்றவா்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவா். எனவே, பரிசோதனை முடிவுகளை சிறப்புப் பணி ஏற்பாடு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை பகல் முதலே வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. கரோனா தொற்றுள்ளவா்களுக்கு மாற்றாக முகவா்களை நியமித்துக் கொள்ளவும் தோ்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. பரிசோதனைப் பணிகளை அந்தந்தப் பகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், சுகாதாரத் துறை துணை இயக்குநா்கள் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com