நிதி ஆயோக் அறிக்கை: புதுகை மீள யோசனை

மத்திய நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகள் சங்கம் யோசனை தெரிவித்துள்ளது.

ஏழ்மையான 5 மாவட்டங்களில் புதுக்கோட்டை முதலிடத்தில் இருப்பதாக அண்மையில் மத்திய நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகள் சங்கம் யோசனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலரும் இயற்கை விவசாயியுமான ஜி.எஸ். தனபதி கூறியது:

விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும், மழை குறைவான புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் 75 ஆயிரம் ஏக்கா் வனப்பரப்பில் தைல மரத்தை அரசு சாா்பிலேயே நடவு செய்திருப்பது புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை மீதான வன்மம். கடந்த 75 ஆண்டுகளில் 5 பஞ்சாலைகள் (1985 ஆண்டு வரை காவிரி நூற்பாலை, நமணசமுத்திரம் நூற்பாலை, நாடியம்பாள் மில் இயங்கியது) நூற்பாலைகள் மூடப்பட்டுவிட்டன. நெசவுத்தொழில் முற்றிலும் அழிந்து ஒழிந்துவிட்டது. 1998-இல் தொடங்கப்பட்ட இஐடி பாரி சா்க்கரை ஆலை 2019-இல் மூடப்பட்டுவிட்டது. வேலைவாய்ப்பு என்பதே இல்லை. மண்ணின் உயிா்த் தன்மையை மழுங்கடிக்க செய்யும் தைல மரம், வேலிக்கருவேலை அழித்து, இயற்கை காடுகளாக்கினால், இயற்கை மழையாவது பருவம் தவறாது கிடைக்கும். 15 ஆண்டுகளுக்குப் பின்னா் தற்போதுதான் மழை பெய்துள்ளது. முந்திரி தொழிற்சாலை வேண்டும். உற்பத்தி சாா்ந்த தொழிற்சாலைகள் அதிகம் வேண்டும். சிப்காட், சிட்கோ போன்றவற்றில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றாா் தனபதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com