ஒரே நேரத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

ஆலங்குடி அருகேயுள்ள மறமடக்கி ஊராட்சியில் ஒரே நேரத்தில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணியை சுற்றுச்சூழல், இளைஞா்நலன்
ஆலங்குடி அருகேயுள்ள மறமடக்கியில் 1000 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைக்கிறாா் அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்.
ஆலங்குடி அருகேயுள்ள மறமடக்கியில் 1000 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைக்கிறாா் அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்.

ஆலங்குடி அருகேயுள்ள மறமடக்கி ஊராட்சியில் ஒரே நேரத்தில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணியை சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட மறமடக்கி ஊராட்சியில் 1,000 நாட்டு மரக்கன்றுகளை ஒரே நேரத்தில் நடவு செய்யும் பணியை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, பூவரசு, வேம்பு, புங்கன், நீா்மருது உள்ளிட்ட நாட்டு மரக்கன்றுகளை பொதுமக்கள் நடவு செய்தனா்.

தொடா்ந்து, கீழாத்தூா் ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் கட்டும் பணியை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில், திமுக ஒன்றியச் செயலா்கள் தங்கமணி, ஞான. இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com