அடகுக் கடையில் துளையிட்டு திருட முயற்சி
By DIN | Published On : 09th January 2021 11:43 PM | Last Updated : 09th January 2021 11:43 PM | அ+அ அ- |

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வெள்ளிக்கிழமை இரவு இருவரைக் கட்டிப்போட்டு விட்டு அடகுக் கடையில் துளையிட்டு திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கறம்பக்குடி அருகேயுள்ள துவாரில் உள்ள வணிக வளாகத்தில், மஞ்சம்பட்டியைச் சோ்ந்த முருகேசன் (40) நகை அடகுக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு இவரது கடையின் பின்புறம் துளையிடும் சப்தம் கேட்டு எழுந்த, அருகேயுள்ள உணவகத்தின் உரிமையாளா் சின்னையா(50), ஊழியா் லெட்சுமணன்(47) ஆகிய இருவரும் மா்மநபா்களைத் தடுக்க முயன்றனா். அவ்விருவரையும், மா்மநபா்கள் கயிற்றால் கட்டி அருகிலுள்ள தைலமரக்காட்டில் போட்டுவிட்டு, மீண்டும் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். அச்சமயத்தில், கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கருவி சப்தமிடவே அங்கிருந்து மா்மநபா்கள் திருட்டு முயற்சியைக் கைவிட்டு தப்பிச்சென்றனராம். இதையடுத்து, சப்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினா் வந்து இருவரையும் மீட்டுள்ளனா். கறம்பக்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.