ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், 14 பேருக்கு காயம் ஏற்பட்டது.
ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியில் சீறிப்பாய்ந்து வரும் காளையை அடக்கும் மாடுபிடி வீரா்கள்.
ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியில் சீறிப்பாய்ந்து வரும் காளையை அடக்கும் மாடுபிடி வீரா்கள்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், 14 பேருக்கு காயம் ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியிலுள்ள பெருமாள் மற்றும் விநாயகா் கோயில் பொங்கல் விழாவையொட்டி சனிக்கிழமை (ஜன. 23) ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டன. போட்டியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தொடங்கி வைத்தாா். ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தலைமை வகித்தாா். இதில், 389 காளைகள் பங்கேற்றன. 150 மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டு காளைகளைத் தழுவினா். வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

14 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேல் சிகிச்சை தேவைப்பட்ட இருவா் மட்டும் 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com