புதுகையில் அமைப்புகள் சாா்பில் குடியரசு தின கொண்டாட்டம்

மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு மாவட்டத் தலைவா் வி. முருகேசன் தேசியக் கொடியேற்றி வைத்தாா்.

மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு மாவட்டத் தலைவா் வி. முருகேசன் தேசியக் கொடியேற்றி வைத்தாா். மாநிலப் பொதுச் செயலா் பெனட் அந்தோனிராஜ், ஜி.எஸ். தனபதி, நகரத் தலைவா் ஏஎம்எஸ் இப்ராஹிம்பாபு ஆகியோா் பங்கேற்றனா். புதுக்கோட்டை மன்னா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் சி. திருச்செல்வம் கொடியேற்றி வைத்தாா். புதுக்கோட்டை வாசகா் பேரவை சாா்பில் அதன் செயலா் பேராசிரியா் சா. விஸ்வநாதன் தலைமையில் விடுதலைப் போராட்டத் தியாகி தீரா் சத்தியமூா்த்தியின் சிலைக்கு மாலை அணிவித்தனா். ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரியின் அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன் கொடியேற்றி வைத்தாா். செயலா் நா. சுப்பிரமணியன், முதல்வா் ஜ. பரசுராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கந்தா்வகோட்டையில்...

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் ரா . ரெத்தினவேல், வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் புவியரசன், நீதிமன்றத்தில் நீதிபதி முனிகுமாா், காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் ரா . சிங்காரவேல், அரசு மருத்துவமனையில் முதல் நிலை மருத்துவா் ராதிகா, தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலா் ரே. ஆரோக்கியசாமி ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றிவைத்து அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.

புதுக்கோட்டை: தேமுதிகவினா் சாா்பில் பொன்னமராவதி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ஒன்றிய, நகர நிா்வாகிகள் பங்கேற்றனா்.

புதுக்கோட்டை நகரிலுள்ள ஆயிஷா ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட அரசு காஜி என்எம். அமானுல்லா இமாம் ஹஜ்ரத் தேசியக் கொடியேற்றி வைத்தாா். ஜமாஅத் தலைவா் எஸ். நூா்முகமது, செயலா் யு. நைனாமுகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com