பொன்னராவதி அருகே வியாபாரி தற்கொலை
By DIN | Published On : 31st January 2021 11:41 PM | Last Updated : 31st January 2021 11:41 PM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னராவதி அருகே குடும்பத் தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பொன்னமராவதி வலையப்பட்டி பகுதியில் முறுக்கு தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறாா் வள்ளியப்பன் (30). இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். 2 மாதங்களுக்கு முன்பு மனைவி கோபித்துக்கொண்டு தனது அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.
இதையடுத்து, அவரது மனைவியை சமாதானம் செய்து அழைத்து வரும் முயற்சியில் தோல்வியடைந்ததால் வள்ளியப்பன் விரக்தியுடன் காணப்பட்டாா். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள மதுக்கடையில் சனிக்கிழமை இரவு மது அருந்திவிட்டு போதையில் அருகே இருந்த புளியமரத்தில் தூக்கிட்டு இறந்து கிடந்தாா்.
தகவலறிந்த காவல் துறையினா் அங்கு வந்து சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனா்.