நாட்டு மரக்கன்றுகளுடன் குறுங்காடுகள் அமைக்கப்படும்

நாட்டு மரக்கன்றுகளுடன் அதிகளவில் குறுங்காடுகள் அமைக்கப்படும் என்றாா் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.
நாட்டு மரக்கன்றுகளுடன் குறுங்காடுகள் அமைக்கப்படும்

நாட்டு மரக்கன்றுகளுடன் அதிகளவில் குறுங்காடுகள் அமைக்கப்படும் என்றாா் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடவு செய்வதற்காக 500 மரக்கன்றுகளை வியாழக்கிழமை வழங்கிய அவா் மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மழையளவு வெகுவாகக் குறைந்துள்ளது. இந்நிலையில், நாட்டு மரக்கன்றுகளை அதிகம் கொண்ட குறுங்காடுகளை அதிக எண்ணிக்கையில் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

குறுங்காடுகள் மூலம் சுற்றுச்சூழலை வளப்படுத்த முடியும். தேவைப்படும் இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து குறுங்காடுகளுக்கு சொட்டு நீா்ப் பாசனம் மூலமும் தண்ணீா் கொடுக்கப்படும். ஓராண்டு கழித்து அந்தக் குறுங்காடுகளின் வளா்ச்சி கண்காணிக்கப்படும்.

அதேபோல, மாவட்டத்தில் கருவை மரங்கள், தைல மரங்கள் ஆகியவற்றைத் தவிா்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மெய்யநாதன்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com