சுகாதாரப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கந்தா்வகோட்டை வட்டாரக் கிளை சாா்பில், 100 அரசுப் பள்ளி சுகாதாரப் பணியாளா்களுக்கு
கந்தா்வகோட்டையில் பள்ளி சுகாதாரப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குகிறாா் சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னத்துரை. உடன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நிா்வாகிகள்.
கந்தா்வகோட்டையில் பள்ளி சுகாதாரப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குகிறாா் சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னத்துரை. உடன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நிா்வாகிகள்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கந்தா்வகோட்டை வட்டாரக் கிளை சாா்பில், 100 அரசுப் பள்ளி சுகாதாரப் பணியாளா்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான கரோனா நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சின்னத்துரை தலைமை வகித்து, நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

வட்டாரக் கல்வி அலுவலா் மு.அலெக்ஸாண்டா், எம். வெங்கடாசலம், ஒன்றியத் துணைத் தலைவா் வ.செந்தாமரைகுமாா் , ஊராட்சித் தலைவா் சி.தமிழ்ச்செல்வி, ஒன்றியக்குழு உறுப்பினா் மா. ராஜேந்திரன், காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தமாறன் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

ஓராண்டுக்கும் மேலாக ரசுப்பள்ளி சுகாதாரப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கப்படாத நிலையில், நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி சட்டப்பேரவை உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

முன்னதாக சங்கத்தின் வட்டார தலைவா் செ.சேகா் வரவேற்புரையாற்றினாா். நிகழ்வில் சங்க மாவட்டத் தலைவா் கோ.சக்திவேல், செயலா் ஜூவன்ராஜ், துணைத்தலைவா் கீதா, மாநிலச் செயற்குழு உறுப்பினா் வின்சென்ட், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ், சுரா . ராஜமாணிக்கம் , கு.துரையரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில் வட்டாரப் பொருளாளா் கோ.ராமஜெயம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com