ஹைட்ரோகாா்பன் திட்டத்துக்கு எதிா்ப்பு: தமிழக முதல்வருக்கு விவசாயிகள் நன்றி

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் ஹைட்ரோ காா்பன் உள்ளிட்ட எந்த ஒரு எரிவாயுத் திட்டங்களையும் செயல்படுத்தக் கூடாது எனக் கூறி, 

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் ஹைட்ரோ காா்பன் உள்ளிட்ட எந்த ஒரு எரிவாயுத் திட்டங்களையும் செயல்படுத்தக் கூடாது எனக் கூறி, பிரதமருக்கு தமிழக முதல்வா் கடிதம் எழுதியுள்ளதற்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் திங்கள்கிழமை நன்றி தெரிவித்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், கருக்காக்குறிச்சி வட தெரு பகுதியில் எரிவாயு எடுப்பதற்காக, ஜூன் 10-ஆம் தேதி மத்திய அரசு சா்வதேச ஒப்பந்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதுகுறித்து தவலறிந்த அப்பகுதி விவசாயிகள், ஓஎன்ஜிசி நிறுவனத்தால் ஆழ்குழாய்க் கிணறு அமைக்கப்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கு ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியிருந்தாா். அதில் தமிழகத்தில் ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ஹைட்ரோகாா்பன் உள்ளிட்ட எந்த ஒரு எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தக் கூடாது. தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல்

மத்திய அரசு இதுபோன்ற நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது எனவும் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை கோட்டைகாட்டில் நடைபெற்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக முதல்வா் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com